Wednesday, June 23, 2010

மறக்க முடியாத ஸ்பரிசம்...

இன்னொருமுறை பிறந்தேன் இப்பூவுலகில்...
இன்னொருமுறை வளர்ந்தேன் இப்பூவுலகில்...
இன்னொருமுறை பயின்றேன் இப்பூவுலகில்...
இன்னொருமுறை பணி செய்தேன் இப்பூவுலகில்...
இன்னொருமுறை திருமணம் ஆனது இப்பூவுலகில்...
இன்னொருமுறை என்னில் பாதியை பார்த்தேன் இப்பூவுலகில்...
முதல்முறை உன்னை தொட்டுபர்த்தபோது
உன் பிஞ்சிமுகம் எனக்கு ஞாபகம் இல்லையடி ஆனால்,
உன் ஸ்பரிசத்தை என்னுயிர் போகும் வரை மறக்க இயலாதடி
என் மகளே...

மறுஜென்மம்

நீ ஒரு விட்டலாசாரியடி
என்னுயிரை உன்னுள் வைத்து கொண்டுவிட்டு
என்னை மட்டும் இப்பூவுலகில் ஜடமாய் அலையவிட்டாய்...
மறுஜென்மம் உண்மை எனில், நானும் மறுஜென்மம் எடுப்பேன்
அப்போதாவது கடவுள் நமக்கு வரம் கொடுக்கட்டும்
என்னுயிரான உன்னை என்னில் வைப்பதற்கு...

Monday, June 21, 2010

நானும் ஒரு தாய்...

சாயங்காலம் என் பணி முடித்து திரும்பும்போது என் வண்டியின் ஒலி கேட்டு ஓடி வருவாய், அந்த புன்னகை ஒன்று போதும் என் செல்லமே. காலையில் நான் பணிக்கு செல்லும்முன் வண்டியில் ஒரு ரவுண்டு போக வேண்டும் என்பாய். இது போல் பல விஷயங்கள் சொல்லலாம், ஆனால் இப்போதும் நான் என் பணிக்கு போய் வருகிறேன், ஆனால் இப்போது நீயும் உன் புன்னகையும் தற்காலிகமாக இல்லையடி

ஒவ்வொரு நாளும் எண்ணுகிறேன், எப்போது உன்னை பார்பேன் என்று... எப்போது உன் சிரிப்பை கேட்பேன் என்று...

பெண்களுக்கும் மட்டும் உரித்தானதா... தாய்மை
இதோ இந்த ஆண்மையின் தாய்மை தாகம்...

ப்ரியமுடன்,
ஒரு தந்தை.

என் முதல் பதிவு தமிழில்...

நண்பர்களே,

இதோ என் முதல் பதிவு தமிழில்.
என் பயணம் இனிதே அமைய வாழ்த்துங்கள்.
என்றும் அன்புடன்
கார்த்திகேயன் மாணிக்கம்.

En Mudhal Padhivu



Anbulla nanbargalukku,




Idhu En mudhal Padhivu.


Nandri,


Karthikeyan Manickam.